Header Logo

செய்திகள்
2 கோடி பெறுமதியான சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

Apr 13, 2026 - 03:51 PM -

0

2 கோடி பெறுமதியான சட்டவிரோத  மோட்டார் சைக்கிள்கள் சிக்கின

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐந்து அதிவேக மோட்டார் சைக்கிள்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அங்கு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த குலசிங்கவுக்கு கிடைத்த தகவலின் பேரில், சமூக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நேற்று (12) மாலை பிலியந்தலை கிளை வீதியில் உள்ள வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை முற்றுகையிட்டு, இந்த அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் அதன் உரிமையாளரைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட குறித்த உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நால்வர் இந்த மோட்டார் சைக்கிள் பாகங்களை தன்னிடம் கொண்டு வந்து கொடுத்ததாகவும், தான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title