Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐ.பி.எல். வரலாற்றில் சாதனைப் படைத்த ஐதராபாத் வீரர்!

Apr 14, 2026 - 12:37 PM -

0

ஐ.பி.எல். வரலாற்றில் சாதனைப் படைத்த ஐதராபாத் வீரர்!
Mobitel inner

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி நேற்று (13) ஐதராபாத்தில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 216 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 217 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 159 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், ரியான் பராக் போன்றோர் இருப்பதால் 217 ஓட்டங்களை எளிதாக சேஸிங் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் ஓவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் அறிமுக வீரரான பிரபுல் ஹிங்கே வீசினார். 

ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி பட்டைய கிளப்புவார்கள் என நினைக்கையில் சூர்யவன்ஷி (அவர் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட்), துரவ் ஜுரல் (2 ஆவது பந்தில் டக்அவுட்), பிரிட்டோரியஸ் (2 ஆவது பந்தில் டக்அவுட்) ஆகியோரை வீழ்த்தினார். 

இதன்மூலம் முதல் ஓவரில் 1 ஓட்டத்தை விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளார். அதுவும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் ஓவரிலேயே அந்த சாதனையைப் படைத்துள்ளார். 

2 ஆவது ஓவரை மற்றொரு அறிமுக வீரர் சகிப் ஹுசைன் வீசினார். இந்த ஓவரின் 4 ஆவது பந்தில் ஜெய்ஸ்வால் 1 ஓட்டத்தை பெற்று இருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara