Header Logo

செய்திகள்
அமெரிக்காவின் செயலை கண்டித்த சீனா!

Apr 14, 2026 - 02:05 PM -

0

அமெரிக்காவின் செயலை கண்டித்த சீனா!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகையானது ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது என சீனாவின் வெளியுறவு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த ஒரு நாளுக்குப் பின்னர், நேற்று முதல் இந்த முற்றுகை அமுலுக்கு வந்தது. 

இந்த முற்றுகை பதற்றத்தை அதிகப்படுத்துவதுடன், ஏற்கனவே பலவீனமாக உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தைச் சீர்குலைக்கும் என சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் எச்சரித்துள்ளார். 

இது ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற நடத்தை என்று ஜியாகுன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

ஈரானிடமிருந்து அதிக அளவு மசகு எண்ணெயைப் பெறும் சீனா, இந்த மோதல் முடிவுக்கு வருவதிலும், சர்வதேச சந்தையில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title