Apr 14, 2026 - 04:12 PM -
0
புத்தாண்டை முன்னிட்டு, கடந்த 3 நாட்களில் அதிவேக வீதிகள் மூலம் 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக வீதிகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் விபத்து அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளானால், 1969 என்ற உடனடி அழைப்பு மையத்திற்குத் தெரிவிக்குமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
