Apr 14, 2026 - 07:58 PM -
0
இந்திய பிரிமியர் லீக் தொடரில் இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
அந்த அணியின் பிரைடன் கார்ஸுக்கு காயமடைந்த நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க உள்வாங்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய தொடரின் எஞ்சிய போட்டிகளுக்காக டில்ஷான் மதுஷங்க 75 இலட்சம் இந்திய ரூபாய் அடிப்படை விலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணையவுள்ளார்.
2026 ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியால் தக்கவைக்கப்பட்ட கார்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக வலைப்பயிற்சியில் துடுப்பாடிய போது தமது வலது கையில் காயம் அடைந்தார்.
எனினும் அவர் காயத்தில் இருந்து குணமடையாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் மூன்று தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
