Apr 15, 2026 - 09:37 AM -
0
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.
நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,
வடக்கு மாகாணத்தில் கடந்த பொது தேர்தலில் சரிவு ஏற்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் பல காரணங்களைக் கூறினாலும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
எமது அரசியல் இலக்கு என்ன என்பது ஒரே பாதையாக ஒரு சுயாட்சியை நோக்கி நகர்கின்றன கட்சியாக உள்ளது.
இருப்பினும் கால ஓட்டத்தில் மக்களுக்கு தேவையான ஏனைய விடயங்கள் தொடர்பான தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனை விட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வேலை வாய்ப்பு இல்லை என பலர் வெளிநாடு செல்கின்றனர்.
இளையவர்கள் வேலைவாய்ப்பு இல்லை என வெளிநாடு செல்கின்றனர். எமது அரசியல் இலக்குடன் இப்படியான விடயங்களினூடாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
--
