Header Logo
Mogo Academy

விளையாட்டு
ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம்!

Apr 15, 2026 - 09:54 AM -

0

ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம்!
Mobitel inner

19 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று (14) இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 22 ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. 

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை குவித்தது. 

193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 160 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது. 

இந்த நிலையில், சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக கொல்கத்தா அணி தலைவர் ரகானேவுக்கு 12 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐ.பி.எல். நடத்தை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட இந்த அபராதமானது, இந்த சீசனில் கொல்கத்தா அணியின் முதல் விதிமீறலாக அமைந்ததால், இந்த அபராதமானது அணி தலைவருக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு தொடரில் இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத கொல்கத்தா அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறுவதால் ரகானே மீது விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara