Header Logo
Mogo Academy

விளையாட்டு
புள்ளி பட்டியலில் மும்பையை முந்திய சி.எஸ்.கே!

Apr 15, 2026 - 10:08 AM -

0

புள்ளி பட்டியலில் மும்பையை முந்திய சி.எஸ்.கே!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 48 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா, அன்குல் ராய் மற்றும் சுனில் நரேன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 

இந்நிலையில் 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக இரமன்தீப் சிங் 35 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து புள்ளிகள் பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது. மறுப்பக்கம் 4 இல் 3 போட்டிகளில் தோல்வியுற்ற மும்பை அணி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara