Apr 15, 2026 - 10:17 AM -
0
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாய்லர் வெடித்தவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஓடியதால், நெரிசல் சூழல் ஏற்பட்டதில், சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் இருந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிற்பகல் 2 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வெடிப்பு நிகழ்ந்த நேரத்தில், அனைத்து தொழிலாளர்களும் ஆலைக்குள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
