Header Logo

வணிகம்
இலங்கையின் உயர்ந்த தர விருது வழங்கி ரிஸ்ட்பரி கௌரவிக்கப்பட்டுள்ளது பாரியளவு உற்பத்திக்கான தேசிய தர விருதை வென்றுள்ளது

Apr 15, 2026 - 11:13 AM -

0

இலங்கையின் உயர்ந்த தர விருது வழங்கி ரிஸ்ட்பரி கௌரவிக்கப்பட்டுள்ளது பாரியளவு உற்பத்திக்கான தேசிய தர விருதை வென்றுள்ளது

CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் இலங்கையின் முதற்தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி, 2023ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய தர விருதினை (SLNQA) பாரிய அளவிலான உற்பத்தி பிரிவின் கீழ் சுவீகரித்துள்ளது. ரிட்ஸ்பரி இந்த விருதினை வெல்லும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். உலகத்தரம் வாய்ந்த தரநிலைகள், வலுவான நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர தயாரிப்புகளை நுகர்வோருக்கு வழங்குவதில் ரிட்ஸ்பரி கொண்டுள்ள அர்ப்பணிப்பினை இந்த வெற்றி பிரதிபலிக்கின்றது. அத்துடன், இது இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சியில் அந்நிறுவனம் வழங்கி வரும் பங்களிப்பையும் உறுதிப்படுத்துகின்றது. 

இலங்கைத் தரக் கட்டளைகள் நிறுவனத்தினால் (SLSI) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை தேசிய தர விருதுகள் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தரம் மற்றும் செயலாற்றுகை மேன்மைக்கான கட்டமைப்புகளுக்கு அமைவாக, நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் பல கட்டங்களைக் கொண்ட ஒரு கடுமையான மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை தேசிய தர விருது (SLNQA), நிறுவன ரீதியிலான மேன்மைக்காக நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாக கருதப்படுகிறது. இது Malcolm Baldrige உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் நிறுவனங்கள் தலைமைத்துவம், மூலோபாயம், நுகர்வோர் கவனம், பணியாளர் ஈடுபாடு, செயல்முறை முகாமைத்துவம் மற்றும் அளவிடக்கூடிய வணிக முடிவுகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. 

இந்த கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கமல் கீகனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை தேசிய தர விருதினை வென்றுள்ளமையானது, நீண்டகாலமாக நாம் கட்டியெழுப்பியுள்ள எமது கட்டமைப்புக்கள், தரநிலைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளுக்குக் கிடைத்துள்ள ஒரு பலமான அங்கீகாரமாகும். தலைமைத்துவம் மற்றும் மூலோபாயம் முதல் அன்றாட செயல்பாடுகள் வரை, நிறுவனத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் தரத்தைப் பேணுவதில் நாம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பினை இது பிரதிபலிக்கின்றது.” என்றார். 

SLS 1509:2015 தரச் சான்றிதழைப் பெற்றுள்ள ரிட்ஸ்பரியின் இந்தச் சாதனையானது, அந்நிறுவனம் ஏற்கனவே பெற்றுள்ள ISO 9001:2015, ISO 22000:2018, FSSC 22000 (பதிப்பு 6) மற்றும் BRCGS போன்ற சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய சான்றிதழ்களையும் மேலும் உறுதிப்படுத்துகின்றது. இந்த ஒருங்கிணைந்த அங்கீகாரங்கள் ரிஸ்பரியின் முகாமைத்துவக் கட்டமைப்பின் வலிமை, சர்வதேச உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை முறையாகப் பின்பற்றுதல் மற்றும் அதன் உற்பத்திச் செயல்பாடுகளில் காணப்படும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான வலுவான கலாசாரம் என்பவற்றை வெளிப்படுத்துகின்றன. 

தன்னுடைய மேன்மைமிக்க பாரம்பரியத்தின் அடிப்படையில், ரிட்ஸ்பரி உள்நாட்டு உற்பத்தித் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய மைல்கற்களைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகின்றது. இந்தச் சாதனையானது, நிலையான தன்மை மற்றும் உலகளாவிய போட்டித்திறன் ஆகியவற்றில் அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்துவதுடன், முன்னோடி மேன்மையை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title