Header Logo

சினிமா
விஜய்க்கு எதிராக போராட்டம்!

Apr 15, 2026 - 11:54 AM -

0

விஜய்க்கு எதிராக போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக பிரபலமான சின்னத்திரை நடிகை ஜூலி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

அவரது இந்த வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் தமிழக வெற்றி கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூர் தொகுதிக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்ட ஜூலி விஜய்யை விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலி நேற்று (14) திடீரென அனுமதியின்றி போராட்டம் நடத்தினார். ஒரு கையில் தி.மு.க.வுக்கு ஆதரவான பேனரையும், இன்னொரு கையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிர்ப்பான பேனரையும் ஜூலி பிடித்திருந்தார். அவருடன் 3 பேரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவ்வையார் சிலை பின்புறம் சர்வீஸ் ரோட்டில் ஜூலி சிறிது நேரம் போராட்டம் நடத்தினார். 

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிடித்திருந்த பதாகையில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்னொரு பதாகையில் அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது எக்ஸ் சிம்பல் இடம்பெற்று இருந்தது. பெண்களுக்கு இவர்களால் பாதுகாப்பு இல்லை என்று அதில் வாசகம் இடம் பெற்று இருந்தது. 

இது பற்றி தகவல் கிடைத்ததும் மெரினா பொலிஸார் விரைந்து சென்று ஜூலியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரிடம் அனுமதியின்றி இது போன்று பொது வெளியில் போராட்டம் நடத்தக்கூடாது என்று பொலிஸார் தெரிவித்தனர். 

தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு தான் பிரசாரம் செய்ய வேண்டும் என்று அவரிடம் பொலிஸார் அறிவுறுத்தினார்கள். பின்னர் ஜூலியிடம் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ஜூலி உள்பட 4 பேர் மீது மெரினா பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அனுமதியின்றி பிரசாரம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title