Header Logo

இந்தியா
எலுமிச்சை பழத்தின் விலை திடீரென அதிகரிப்பு

Apr 16, 2026 - 10:43 AM -

0

எலுமிச்சை பழத்தின் விலை திடீரென அதிகரிப்பு

கோடை காலம் வந்தாலே எலுமிச்சம் பழத்திற்கான கேள்வி அதிகரித்துவிடும். மற்ற நேரங்களில் எல்லாம் ஊறுகாய் தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எலுமிச்சை, கோடை காலத்தில் ஜூஸ் தயாரிப்புக்கும் அதிகம் பயன்படுத்தப்படுவதால், அதற்கு கேள்வி அதிகரித்து விடுகிறது. 

இந்தியாவின் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம் புளியங்குடி, சிவகிரி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், கடையம், சிங்கிலிபட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு போதுமான மழை இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் குறைந்துள்ளது. 

40 டன் விளைச்சல் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 டன் அளவுக்கே இருக்கிறது. அதனால், வரத்தும் 50 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், எலுமிச்சை விலையும் அதிகரித்து வருகிறது. 

கடந்த மாதம் 90 ரூபாவுக்கு விற்பனையான ஒரு கிலோ எலுமிச்சை தற்போது 170 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஜூன் 15 ஆம் திகதி வரை எலுமிச்சை சீசன் இருந்தாலும், விளைச்சல் குறைவால் இன்னும் விலை அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title