Header Logo

வடக்கு
11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது!

Apr 16, 2026 - 11:10 AM -

0

11 வயது சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியவர் கைது!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவர் நேற்று (15) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார். 

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் குறித்த சந்தேகநபரை வட்டுக்கோட்டை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 

சிறுமி பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title