Apr 16, 2026 - 04:31 PM -
0
தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விழா தொடக்கமாக கட்சியின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டு கொள்கைப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.
முன்னதாக, பிரசார கூட்டங்களில் முக்கிய அம்சங்களை மட்டுமே விஜய் வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க வின் முழு தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை விஜய் வழங்க விவசாயி நாராயணன் பெற்றுக்கொண்டார்.
தேர்தல் அறிக்கையை பெற்றுக்கொண்ட விவசாயி நாராயணன், விஜய்க்கு நெற்கதிர் பரிசு வழங்கினார்.
தவெக தேர்தல் அறிக்கையின் 2 ஆவது பிரதியை ஆசிரியைக்கும். 3 ஆவது பிரதியை ஆட்டோ ஓட்டுநருக்கும் விஜய் வழங்கினார்.
4 ஆவது பிரதியை அங்கன்வாடி பணியாளருக்கும், 5 ஆவது பிரதியை ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கும் விஜய் வழங்கினார்.
தேர்தல் அறிக்கையின் 6 ஆவது பிரதியை மீனவருக்கும், 7 ஆவது பிரதியை நெசவாளருக்கும் விஜய் வழங்கினார்.
