Header Logo

இந்தியா
10 அம்ச முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த விஜய்!

Apr 16, 2026 - 04:49 PM -

0

10 அம்ச முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த விஜய்!

மக்களின் தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றினார். 

விழாவில் விஜய் பேசியதாவது, 

ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் தரமான பட்டுச்சேலை வழங்கப்படும். 

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலகத்தர அளவிலான சிகிச்சை அளிக்கும் வகையில் 25 லட்சம் ரூபா இன்சூரன்ஸ். 

பாடசாலை மாணவர்களின் இடைநின்றலை தடுக்க 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபா நிதி வழங்கப்படும். 

தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பாடசாலைகள் அமைக்கப்படும். இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் வழங்கப்படும். 

டிப்ளமோ முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக 2,500 ரூபா வழங்கப்படும். 

பட்டம் முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலையில்லா கால விவாரணமாக 4,000 ரூபா வழங்கப்படும். 

தமிழ்நாட்டில் உள்ள தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு 75 சதவீதம் வேலை தரும் வகையில் சட்டம் இயற்றப்படும். 

5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 5 ஏக்கருக்கு மேல், 50 சதவீத அளவிற்கு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். 

அனைத்து மீனவர்களுக்கும் வீடு கட்டித்தரும் லட்சிய வீடு திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதந்தோம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title