Header Logo

செய்திகள்
சந்தன கத்ரியாராச்சியின் கைது குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

Apr 16, 2026 - 06:00 PM -

0

சந்தன கத்ரியாராச்சியின் கைது குறித்து பொலிஸாரின் அறிவிப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி, இன்று (16) காலை பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாம்பே பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சியின் வீடு சோதனையிடப்பட்டது. 

இந்த சோதனையின் போது பின்வரும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன: 

ஒரு கைக்குண்டு 

இரண்டு T-56 ரக மெகசின்கள் 

221 T-56 ரகத் தோட்டாக்கள் 

103, 0.22 ரகத் தோட்டாக்கள் 

31, 84S ரகத் தோட்டாக்கள் 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான விவசாய நிலத்திற்காக வழங்கப்பட்ட ஒரு 12 போர் (12-bore) ரக துப்பாக்கி 

சந்தேகநபர் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title