Header Logo
Mogo Academy

விளையாட்டு
வீணானது டி காக்கின் சதம் - பஞ்சாப் அணி அபார வெற்றி!

Apr 17, 2026 - 09:41 AM -

0

வீணானது டி காக்கின் சதம் - பஞ்சாப் அணி அபார வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 கிரிககெட் தொடரின் 24 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று (16) மோதின. 

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 112 ஓட்டங்களை பெற்றார். 

இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் குவிண்டன் டி காக் ஐ.பி.எல். தொடர்களில் அதிகமுறை 50 இற்கும் அதிக ஓட்டங்களை அடித்த முழு நேர விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் கே.எல். ராகுல் முதலிடத்தில் உள்ளார். இவர் இதுவரை 31 முறை அரைசதம் கடந்துள்ளார். மறுப்பக்கம் குவிண்டன் டி காக் 25 முறை அரைசதம் கடந்துள்ளார். எம்.எஸ். தோனி 24 முறை அரைசதம் அடித்துள்ளார். 

இதுதவிர மூன்று வெவ்வேறு ஐ.பி.எல். அணிகளுக்காக சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை குவிண்டன் டி காக் பெற்றுள்ளார். 

இதனை தொடர்ந்து ஐ.பி.எல். தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கராக டி காக் - இன் 112 இடம்பிடித்துள்ளது. முன்னதாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 109 ஓட்டங்கள் அடித்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சென் மற்றும் சஷாங்க் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 80 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக கசான்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட் கைப்பற்றினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara