Header Logo
Mogo Academy

விளையாட்டு
விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்த பாபர் அசாம்!

Apr 17, 2026 - 05:04 PM -

0

விராட் கோலி, வார்னர் வரிசையில் இணைந்த பாபர் அசாம்!
Mobitel inner

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம். தற்போது, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடி வருகிறார். 

கராச்சியில் நடந்த லீக் போட்டியில் முதலில் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவரில் 154 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து ஆடிய பெஷாவர் சால்மி 18.3 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

பெஷாவர் அணி தலைவர் பாபர் அசாம் 51 பந்துகளில் 71 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 100 அரைசதங்களை பூர்த்தி செய்த உலகின் 3 ஆவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றார். 

டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையும், ஆசிய அளவில் விராட் கோலிக்கு (107 அரைசதங்கள்) அடுத்தபடியாக 2 ஆவது இடத்திலும் உள்ளார். 

டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் (116), விராட் கோலி (107) ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர். 

இந்த அரை சதங்கள் அனைத்தும் சர்வதேச போட்டிகள் மற்றும் பல்வேறு லீக் தொடர்களில் சேர்த்து பதிவுசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara