Header Logo
Mogo Academy

விளையாட்டு
5 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் இல்லை!

Apr 17, 2026 - 05:21 PM -

0

5 போட்டிகளில் ஒரு விக்கெட்டும் இல்லை!
Mobitel inner

உலக கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா, நடப்பு ஐ.பி.எல். 2026 சீசனில் இதுவரை ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் போட்டியில் வென்ற மும்பை அணி, அதன்பிறகு தொடர்ச்சியாக 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில், பும்ராவின் பார்ம் குறித்த விமர்சனங்களுக்கு மும்பை அணி பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறியதாவது, 

பும்ரா மிகச் சிறப்பாகவே பந்து வீசுகிறார். பிரச்சினை அவரிடம் இல்லை, மற்ற பந்துவீச்சாளர்களிடம்தான் உள்ளது. 

பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அழுத்தம் கொடுக்கத் தவறுவதால், எதிரணி துடுப்பாட்ட வீரர்கள் பும்ராவின் ஓவர்களில் ரிஸ்க் எடுக்காமல் மிகவும் நிதானமாக விளையாடுகின்றனர். 

பந்துவீச்சுத் துறை ஒரு யூனிட்டாகச் செயல்படவில்லை. அணியில் பும்ரா மட்டும் பந்துவீச்சாளர் அல்ல. மற்ற வீரர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். 

பும்ரா ஒருமுறை விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்கிவிட்டால் அவரைத் தடுப்பது கடினம். அணியில் ஏற்பட்டுள்ள சில காயங்கள் மற்றும் வீரர்களின் உடல்நலப் பிரச்சனைகள் தங்களது திட்டங்களைப் பாதித்துள்ளன. 

விரைவில் முழு பலத்துடன் களம் காண்போம் என தெரிவித்தார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara