Apr 17, 2026 - 06:59 PM -
0
தமிழகத்தின் கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பாதையில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கேரளாவிலிருந்து வால்பாறை நோக்கி 16 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வால்பாறை - பொள்ளாச்சி பிரதான வீதியில் அமைந்துள்ள 13 ஆவது கொண்டை ஊசி வளைவில் குறித்த வாகனம் திரும்ப முற்பட்ட போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பாரிய பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த கோர விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 6 பேர் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக பொள்ளாச்சி மற்றும் கோவை அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் வால்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
