Header Logo

செய்திகள்
'பொடி பெட்டி'யை கொலை செய்ய முயன்றவரை கைது செய்த STF!

Apr 18, 2026 - 07:13 AM -

0

'பொடி பெட்டி'யை கொலை செய்ய முயன்றவரை கைது செய்த STF!

பாதாள உலகக் கும்பல் தலைவரான 'லொக்கு பெட்டி'  என்பவரின் சகோதரரான 'பொடி பெட்டி'யை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சந்தேகநபர் ஒருவர், அஹுங்கல்ல பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி அஹுங்கல்ல, லோகன்வத்த மயானத்திற்கு அருகில் மூன்று சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 'பொடி பெட்டி' மீது, சந்தேகநபர் டி-56 ரக துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார். இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று இரவு கொஸ்கொட - ஹேகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்த போதே குறித்த சந்தேகநபர் பிடிபட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 13 கிராம் 760 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் கொஸ்கொட, பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title