Header Logo

செய்திகள்
குமார ஜயகொடியின் பதவி விலகலை வரவேற்று அரசாங்கத்தை சாடிய சுமந்திரன்!

Apr 18, 2026 - 05:53 PM -

0

குமார ஜயகொடியின் பதவி விலகலை வரவேற்று அரசாங்கத்தை சாடிய சுமந்திரன்!

வலுசக்தி அமைச்சராக செயற்பட்ட குமார ஜயகொடி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளார். 

எனினும், முன்னாள் அமைச்சரைப் பாதுகாத்து அவரைப் பதவியில் தக்கவைப்பதற்காக வாக்களித்தமை தொடர்பில் அரசாங்கத்தையும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தவை என்பதை நிர்வாகமே ஒப்புக்கொண்ட பின்னரும், அரசாங்கமும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவரைத் தொடர்ந்து பாதுகாத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என சுமந்திரன் தனது 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார். 

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பாக புதிதாக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், குமார ஜயகொடி நேற்று (17) தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title