Apr 18, 2026 - 10:20 PM -
0
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் பெருமளவிலான பேருந்துகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட பேருந்துகள், பயணிகளை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்காகவும் பயன்படுத்தப்படும் என அதன் இயக்கம் மற்றும் சேவை மேற்பார்வைப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரல தெரிவித்தார்.
நேற்று (17) நிலவரப்படி, 1,500 பேருந்துகள் மூலம் சுமார் 59,000 பயணிகள் மீண்டும் கொழும்பு வந்தடைந்துள்ளதாகவும், நாளையும் மற்றைய நாளும் பயணிகளின் தேவை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் பதுளை, மொனராகலை, ஹற்றன், கண்டி போன்ற பகுதிகளுக்கு அதிகளவிலான பயணிகள் பயணித்துள்ளனர்.
எனவே, அவர்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகப் போதுமான பேருந்துகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
