Apr 20, 2026 - 09:58 AM -
0
ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 29 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் நேற்று (19) மோதின.
நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ப்ரியான்ஷ் 93 ஓட்டங்களையும், கனொலி 87 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில், அதிக முறை 20 பந்துகளுக்கும் குறைவாக அரைசதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ப்ரியன்ஷ் ஆர்யா கே.எல். ராகுலை முந்தியுள்ளார். தற்போது ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளுக்கும் குறைவாக எதிர்கொண்டு மூன்று முறை அரைசதம் விளாசியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் (19 பந்துகள்), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி (16 பந்துகள்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டி (19) என இதுவரை மூன்றுமுறை ப்ரியன்ஷ் ஆர்யா 20 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்துள்ளார்.
பந்து வீச்சில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக ப்ரின்ஸ் யாதவ் மற்றும் மணிமாறன் சித்தார்த் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக அணி தலைவர் ரிஷப் பண்ட் 43 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக மார்க்கே யான்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
