Header Logo
Mogo Academy

விளையாட்டு
நான் எனது நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன்!

Apr 20, 2026 - 01:36 PM -

0

நான் எனது நாட்டுக்காக மட்டுமே விளையாடுவேன்!
Mobitel inner

ஆப்கானிஸ்தானின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் தனக்கு இந்தியா, அவுஸ்திரேலியா குடியுரிமையை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார். 

'ரஷீத் கான், தெருக்களிலிருந்து நட்சத்திர அந்தஸ்து வரை' என்ற அவரின் சுயசரிதையில் அவர் இதை குறிப்பிட்டுள்ளார். 

புத்தகத்தின்படி, 2023 ஐபிஎல் சீசனின் போது, இந்திய கிரிக்கெட்டின் முக்கியப் பிரமுகர் ஒருவர் ரஷித் கானைச் சந்தித்து "உங்கள் நாட்டில் (ஆப்கானிஸ்தான்) நிலைமை சரியில்லை. நீ பேசாமல் இந்தியாவிலேயே தங்கிவிடு, உனக்கு இந்தியக் குடியுரிமை மற்றும் ஆவணங்களை நாங்கள் பெற்றுத் தருகிறோம். இந்தியாவிற்காக விளையாடு" என்று அவர் கேட்டுக்கொண்டார். 

இதற்கு ரஷித் கான் புன்னகையுடன், "மிக்க நன்றி, ஆனால் நான் எனது நாடான ஆப்கானிஸ்தானுக்காக மட்டுமே விளையாடுவேன்" என்று பதிலளித்துள்ளார். 

இந்தியா மட்டுமல்லாமல், அவுஸ்திரேலியாவும் அவருக்கு இதேபோன்ற அழைப்பை விடுத்துள்ளது. "நான் எனது தாய்நாட்டிற்காக விளையாடாவிட்டால், வேறு எந்த நாட்டிற்காகவும் விளையாட மாட்டேன்" என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். 

2018 இல் கொல்கத்தாவுக்கு எதிரான சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்கள் அவருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara