Header Logo
Mogo Academy

விளையாட்டு
புதிய வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ்!

Apr 20, 2026 - 04:08 PM -

0

புதிய வரலாறு படைத்த பஞ்சாப் கிங்ஸ்!
Mobitel inner

ஐபிஎல் 2026 தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (20) 30 ஆவது லீக் போட்டி குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தோல்வியே சந்திக்காத முதல் அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 

இந்த சீசனில் பஞ்சாப் அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 இல் வெற்றியும், 1 போட்டி மழையினால் முடிவில்லாமலும் அமைந்ததால், ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் உடனான முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், சிஎஸ்கே உடனான 2 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், எஸ்ஆர்ஹெச் உடனான 4 ஆவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பை உடனான 5 ஆவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், நேற்று (19) இடம்பெற்ற போட்டியில் லக்னோவிற்கு எதிரான 6 ஆவது போட்டியில் 54 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தனது வெற்றியை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளது. 

கொல்கத்தா அணியுடனான மூன்றாவது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன் 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் 2015 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 5 போட்டிகளில் வென்றதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது. 

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் இறங்கியுள்ள பஞ்சாப் அணி, இந்த சீசனில் கிண்ணத்தை வெல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara