Header Logo
Mogo Academy

விளையாட்டு
டெல்லியை 47 ஓட்டங்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Apr 22, 2026 - 10:24 AM -

0

டெல்லியை 47 ஓட்டங்களால் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் ​நேற்று (21) இடம்பெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. 

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. 

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக அபிஷேக் சர்மா 135 ஓட்டங்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

பந்து வீச்சில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அக்‌ஷர் பட்டேல் 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

243 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

துடுப்பாட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக நிதிஷ் ரணா 57 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் சன்ரைசர்ஸ் அணி சார்பாக இஷான் மலிங்க 4 விக்கெட்டுகளையும், ஷர்ஷ் துபே 3 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷனகா மற்றும் ஷகிப் ஹூசைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara