Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஐசிசி கிரிக்கெட் பொது மேலாளர் வசீம் கான் இராஜினாமா!

Apr 22, 2026 - 11:34 AM -

0

ஐசிசி கிரிக்கெட் பொது மேலாளர் வசீம் கான் இராஜினாமா!
Mobitel inner

ஐசிசியின் கிரிக்கெட் பொது மேலாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றிய வசீம் கான் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அவர் இந்தப் பதவியைப் பொறுப்பேற்றிருந்தார். இடதுகை துடுப்பாட்ட வீரரான இவர், வார்விக்ஷயர், சசெக்ஸ் மற்றும் டெர்பிஷயர் அணிகளுக்காக 58 முதல்தர போட்டிகளிலும் 30 லிஸ்ட் ஏ போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பல சிரேஷ்ட அதிகாரிகள் தமது பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது வசீம் கானும் இணைந்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட் பேரவையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய முக்கிய நியமனங்கள்: 

தலைமை நிர்வாக அதிகாரி (CEO): ஜெஃப் அலர்டைஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சஞ்சோக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். 

போட்டிகளுக்கான தலைவர்: கிறிஸ் டெட்லிக்கு பதிலாக கௌரவ் சக்ஸேனா நியமிக்கப்பட்டுள்ளார். 

ஊழல் எதிர்ப்புப் பிரிவுத் தலைவர்: அலெக்ஸ் மார்ஷலுக்குப் பதிலாக ஆண்ட்ரூ எஃப்கிரேவ் நியமிக்கப்பட்டுள்ளார்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara