Header Logo
Mogo Academy

விளையாட்டு
ஈரானுக்கு பதிலாக பங்கேற்க இத்தாலி மறுப்பு!

Apr 25, 2026 - 06:35 PM -

0

ஈரானுக்கு பதிலாக பங்கேற்க இத்தாலி மறுப்பு!
Mobitel inner

பிபா (FIFA) கால்பந்து உலகக் கிண்ண தொடரில், ஈரான் அணிக்கு மாற்றாகப் பங்கேற்க இத்தாலிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அழைப்பினை இத்தாலி அதிரடியாக நிராகரித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி இந்த அழைப்பு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இத்தாலி விளையாட்டுத் துறை அமைச்சர் ஆண்ட்ரியா, 

"ஈரானுக்குப் பதிலாக இத்தாலி விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை. இது ஒரு நல்ல யோசனையும் அல்ல" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து தனது கோரிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், 

"இந்த அழைப்பு அரசியல் ரீதியானது அல்ல. ஈரான் அணி கடைசி நிமிடத்தில் தொடரிலிருந்து விலகினால், அதற்கான ஒரு மாற்றுத் திட்டமாகவே (Back-up plan) இத்தாலிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது" என்று கூறியுள்ளார். 

கால்பந்து உலகின் ஜாம்பவானாகக் கருதப்படும் இத்தாலி அணி, இதுவரை 4 முறை உலகக் கிண்ணங்களை வென்றுள்ளது. 

இருப்பினும், அந்த அணி தற்போது கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. இத்தாலி அணி தொடர்ச்சியாக 3 ஆவது முறையாக உலகக்கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறவில்லை. தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று நுழையாத நிலையில், மாற்று அணியாக உள்ளே நுழைய இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara