Header Logo
Mogo Academy

விளையாட்டு
குஜராத்திடம் வீழ்ந்தது சென்னை

Apr 26, 2026 - 09:47 PM -

0

குஜராத்திடம் வீழ்ந்தது சென்னை
Mobitel inner

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி குஜராத் டை்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

சென்னையில் இன்று (26) நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டை்டன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது. 

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 74 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

இந்தநிலையில் 159 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய குஜராத் டை்டன்ஸ் அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் குஜராத் டை்டன்ஸ் அணியின் சார்பில் சாய் சுதர்ஷன் 87 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார். 

குறித்த வெற்றியின் மூலம் குஜராத் டை்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara