Header Logo
Mogo Academy

விளையாட்டு
தோனி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Apr 28, 2026 - 02:08 PM -

0

தோனி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Mobitel inner

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் தோனி இன்னும் விளையாடாதது குறித்து அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். 

ஐபிஎல் 2026 தொடர் தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அணி தலைவர் எம்.எஸ். தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரம்பத்தில் அவர் முதல் இரண்டு வாரங்கள் மட்டுமே ஓய்வெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை குறித்த முக்கியத் தகவலை சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பகிர்ந்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிளெமிங், தோனிக்கு ஏற்பட்ட 'கெண்டைக்கால் தசை' காயம் மீண்டும் தீவிரமடைந்ததே அவர் விளையாடாததற்கு முதன்மையான காரணம் என்று தெரிவித்துள்ளார். 

பயிற்சி ஆட்டத்தின் போது தோனிக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், அதிலிருந்து மீண்டு வர அவர் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், மீண்டும் அதே இடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் குணமடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார். 

இருப்பினும், தோனி மைதானத்தில் தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்வதுடன், சமீபத்தில் விக்கெட் கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

அணியின் பிசியோதெரபிஸ்ட் கண்காணிப்பில் அவர் வேகமாக ஓடி பயிற்சி எடுப்பதையும் காண முடிகிறது. அவர் எப்போது களம் இறங்குவார் என்பது தோனியின் உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்றும், இறுதி முடிவை அவரே எடுப்பார் என்றும் பிளெமிங் கூறியுள்ளார். 

தற்போது புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்தில் இருக்கும் சிஎஸ்கே, மே 2 ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் தோனி மீண்டும் களத்திற்கு திரும்புவாரா என்பதே சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara