Header Logo
Mogo Academy

விளையாட்டு
ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

Apr 29, 2026 - 11:35 AM -

0

ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
Mobitel inner

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று (28) மோதின. 

நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ஓட்டங்களை குவித்தது. 

பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டொய்னிஸ் 62 ஓட்டங்களையும், பிரப்சிம்ரன் சிங் 59 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பாக யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் பர்கெர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.​ 

ராஜஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக ஃபெரரியா 25 பந்துகளில் 52 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 51 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பாக சாஹல் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட் வீழ்த்தினர்.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara