Header Logo
SLIC
கிழக்கு
அரசாங்கத்திற்கு சேறு பூச முற்படுபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்

Apr 30, 2026 - 10:06 PM

அரசாங்கத்திற்கு சேறு பூச முற்படுபவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள்
Mobitel Inner 1278
EDEX Inner

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், பொய்களைக் கூறினாலும், சேறு பூச முற்பட்டாலும் அவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தாசாமி பிரபு தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (30) மாலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது மிகத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. 

ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நேயமிக்க அரசாங்கம் என்பதை மீண்டும் மீண்டும் நாங்கள் ஞாபகமூட்டிக் கொண்டிருக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாளை மே மாதம் முதலாம் திகதி உலகத் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. 

எமது தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக, இம்முறை 21 மாவட்டங்களில் தொழிலாளர்களை ஒன்று சேர்த்து மே தினக் கூட்டத்தினை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். 

மட்டக்களப்பிலும் காந்தி பூங்காவிலே நாளை மதியம் 12 மணி அளவில் எமது தோழர் சுனில் ஹந்துனெத்தி தலைமையிலே இந்தக் கூட்டம் இடம்பெற இருக்கின்றது. 

ஆகவே இந்த காலகட்டத்திலே ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தி என்று சொல்லக்கூடிய சஜித்தின் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் தாங்கள் ஒன்று சேர்ந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாட இருப்பதாக, மே தினத்தை கொண்டாட இருப்பதாக அவர்கள் ஆரம்பத்திலே குறிப்பிட்டிருந்தார்கள். 

பின்னர் அவர்களுக்கு இடையே இடம்பெற்ற அந்தப் போட்டியிலே தனித்தனியாகப் பிரிந்து, இன்னொருவர் மக்களுக்கு 'போயா' தினத்தை முன்னிட்டு தன்சல் வழங்கப்போவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். 

இன்னும் ஒரு தரப்பினர் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கு இடம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

ஆகவே, இவர்கள் 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' என்ற போர்வையின் கீழே ஒன்று சேர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக, அரசாங்கத்தின் நல்ல செயல்பாடுகளை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். 

அரசாங்கத்திற்கு எதிராகப் பல கருத்துக்களையும் பொய்களையும் கூறி மக்களைத் திசைதிருப்ப முற்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று இந்த ஒரு மே தினக் கூட்டத்தைக் கூட ஒன்று சேர்ந்து, ஒன்றிணைந்து எதிர்க்கட்சிகளாகச் செயல்படுவதற்கு அவர்களால் முடியாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தாசாமி பிரபு குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278