Header Logo

செய்திகள்
கொழும்பு உட்பட பல இடங்களில் மே தின பேரணிகள் ஏற்பாடு

May 1, 2026 - 08:36 AM -

0

கொழும்பு உட்பட பல இடங்களில் மே தின பேரணிகள் ஏற்பாடு

இன்று (01) அனுஷ்டிக்கப்படும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் பல அரசியல் கட்சிகள் மே தினக் கூட்டங்களை நடத்துவதற்குத் தயாராகியுள்ளன. 

கொழும்பு நகரை மையமாகக் கொண்டு பல பிரதான கட்சிகளின் பேரணிகள் நடைபெறவுள்ளன. 

தேசிய மக்கள் சக்தி 

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இக்கட்சி, இம்முறை 21 மாவட்டங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. 

இதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நுவரெலியா மற்றும் மகரகம ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் கலந்துகொள்ளவுள்ளார். 

ஐக்கிய மக்கள் சக்தி 

சஜித் பிரேமதாச தலைமையிலான இக்கட்சியின் மே தினப் பேரணி மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

சர்வஜன அதிகாரம் 

திலித் ஜயவீர தலைமையிலான சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டம் கொழும்பு ஹென்றி பேதிரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 

இக்கட்சியின் பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. 

முன்னிலை சோசலிச கட்சி 

முன்னிலை சோசலிச கட்சி தமது மே தினக் கூட்டத்தை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். 

இதேவேளை மே தினப் பேரணிகள் மற்றும் ஊர்வலங்களை முன்னிட்டு கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

title