May 1, 2026 - 11:30 AM -
0
இந்தியாவின் மத்தியபிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் சுற்றுலா படகில் 31 பேர் சென்ற போது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
அணை நீரில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல்போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
