Header Logo

செய்திகள்
நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் - விசேட குழு நியமனம்

May 1, 2026 - 01:13 PM -

0

நிதியமைச்சு அதிகாரியின் மர்ம மரணம் - விசேட குழு நியமனம்

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை முன்னெடுப்பதற்காக சட்ட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்‌ஷ உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். 

பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரங்க ராஜபக்‌ஷ நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். 

அவரது சடலம் அவரது வீட்டிற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது. 

இது தற்கொலையா? அல்லது கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மேலதிக பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

title