Header Logo

இந்தியா
மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது!

May 2, 2026 - 09:22 AM -

0

மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் 152 தொகுதிகளுக்கு கடந்த 23 ஆம் திகதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது மிகப்பெரிய அளவில் வன்முறை, மோதல், வாக்கு இயந்திரம் சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இதனால் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவில்லை. 

142 தொகுதிகளுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 29 ஆம் திகதி நடைபெற்றது. இதில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. பல வாக்குச்சாவடிகளில் பாஜக சின்னம் டேப் ஒட்டி மறைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்து, இரண்டு தொகுதிகளுக்கான உட்பட்ட 15 வாக்குச்சாவடிகளில் இன்று (02) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. நாளை மறுநாள் (04) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

மகர்ஹாத் பாஸ்சிம் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளிலும், டைமண்ட் ஹார்பர் தொகுதியில் உள்ள 4 வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title