Header Logo

செய்திகள்
மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது

May 2, 2026 - 03:29 PM -

0

மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள் கைது

மாலபே, சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றிற்கு அருகில் கவனயீனமாக மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபட்ட 22 இளைஞர்கள், அந்த மோட்டார் சைக்கிள்களுடன் கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இளைஞர் குழுவொன்று மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவதாக கடுவலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 'வட்ஸ்எப்' குழுவொன்றின் ஊடாக இணைந்து இந்த இடத்திற்கு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் இலங்கையில் பதிவு செய்யப்படாத இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட 22 இளைஞர்களும் கடுவலைப் பகுதிக்கு வெளியே வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 05ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title