Header Logo

வடக்கு
செம்மணியில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

May 2, 2026 - 05:29 PM -

0

செம்மணியில் 243 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்று (02) இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் மூன்று என்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இன்று அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித என்பு கூட்டு தொகுதியுடன் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 246 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 243 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண் அரித்து எடுக்கப்பட்ட நிலையில், தற்போது அவை உலர விடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் புதைகுழிக்குள் மரத்திலான பெட்டி போன்ற உருவம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணிகள் முடிவடைந்த பின்னரே, அது தொடர்பில் உறுதியாக கூற முடியும் எனவும், நாளைய தினம் (03) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் நடைபெறாது எனவும், 7 ஆம் நாள் அகழ்வு பணிகள் நாளை மறுதினம் (04) மேற்கொள்ளப்படும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title