May 3, 2026 - 10:24 AM -
0
டெல்லி - உத்தரப்பிரதேச எல்லை அருகே அமைந்துள்ள விவேக் விகார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய தீ விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோர விபத்து குறித்து பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், வீட்டிலிருந்த AC வெடித்ததே தீ விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.
