Header Logo

இந்தியா
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - திமுக

May 3, 2026 - 03:47 PM -

0

 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் - திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (4) நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக ஒரு இலட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 

முக்கிய இடங்களில் துணை இராணுவப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

வாக்கு எண்ணும் மையங்கள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நாளை காலை முதல் பரபரப்பாக இருக்கும். 

இதையொட்டி தமிழக பொலிஸார் சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் மட்டும் 18 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

மேலும் 40-க்கும் மேற்பட்ட துணை இராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தியபடி பணியில் உள்ளனர். 

அனைத்து ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், பொலிஸ் கமிஷனர்கள், மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது வாக்கு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற இடங்களிலும், பிரச்சினைக்குரிய பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழக டிஜிபிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார். 

அதில், தமிழ்நாட்டில் நாளை வாக்கு எண்ணிக்கையை சீர்குலைத்து, சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட பாஜகவும், சில கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. 

இதனை முறியடிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். 

தேர்தல் ஆணையம் பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

எதிர்க்கட்சியினரால் எதையும் சாதிக்க முடியாது!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

'Beauty of Sri Lanka' புகைப்படக் கண்காட்சி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

யாழில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இரா. சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

title