Header Logo
Mogo Academy

விளையாட்டு
இந்திய அணியின் முன்னாள் வீரர் திடீர் மரணம்!

May 7, 2026 - 03:24 PM -

0

இந்திய அணியின் முன்னாள் வீரர் திடீர் மரணம்!
Mobitel inner

ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியவரும், விராட் கோலியின் சக வீரருமான அமன்பிரீத் சிங் கில் காலமானார். 36 வயதே ஆன அவரது மறைவு கிரிக்கெட் உலகை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்திய U19 அணியில் இடம்பெற்றிருந்தவர் அமன்பிரீத் சிங் கில். கடந்த 2006 முதல் 2008 வரை 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் விராட் கோலியின் சக வீரராக இருந்த கில், பஞ்சாப் அணிக்காக ஆறு முதல் தரப் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஐபிஎல்லிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார் அமன்பிரீத் சிங். 

முதல் ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் அங்கம் வகித்தார். பின்னர் பஞ்சாபின் மூத்த தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் அவர் திடீரென மரணமடைந்திருக்கிறார் என்கிற செய்தி கிரிக்கெட் உலகை துயரில் ஆழ்த்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 

இந்தச் செய்தியைக் கேட்டு "அதிர்ச்சியும் வருத்தமும்" அடைந்ததாக கோலி ட்வீட் செய்திருந்த நிலையில், யுவராஜ் சிங்கும் கில்லுக்கு அஞ்சலி செலுத்தி, "அமன்பிரீத் சிங் கில்லின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் விளையாட்டை நேசித்த, அமைதியான, கடின உழைப்பாளி வீரர்" என்று கூறினார். 

பஞ்சாப் கிரிக்கெட் சங்கமும் தனது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், "பஞ்சாப் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மூத்த தேர்வுக் குழுவின் உறுப்பினருமான அமன்பிரீத் சிங் கில் மறைவுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எங்களது மனமார்ந்த இரங்கல்கள்." என்று கூறப்பட்டுள்ளது. 

அமன்பிரீத் சிங் கில் 2007 இல் இந்தியாவுக்காக ஐந்து இளைஞர் ஒருநாள் போட்டிகளிலும் ஒரு இளைஞர் டெஸ்ட் போட்டியிலும் விளையாடினார். இருப்பினும், 2008 உலகக் கிண்ணத்தை வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய U-19 அணியில் அவர் இடம்பெறவில்லை.


MOST READ

காணொளி
செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

செப்டம்பர் 22 ஆம் திகதி ஒத்திவைப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

A35 வீதி முதலாவது பாலம் திறப்பு!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

லிந்துலை வீதியில் அதிகாலையில் கொடூர விபத்து!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

152 ஆவது வருட ஆடிவேல் வௌ்ளிரத பவனி!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

பெண் பலி, சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

Mobitel Upahara