May 8, 2026 - 10:24 AM -
0
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நாக பூசணி அம்மன் ஆலய உண்டியல் கடந்த 06 ஆம் திகதி அதிகாலை உடைக்கப்பட்டு உண்டியல் காசு திருடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் காலை ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு வழங்கப்பட்டதை அடுத்து துரித கெதியில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இருவரை குறிகட்டுவான் பகுதியிலும், மற்றுமொருவரை நயினாதீவு பகுதியிலும் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து உண்டியல் காசு 21 இலட்ச ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் கைதான மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் , அவர்கள் 16, 17 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
--
