Header Logo

செய்திகள்
ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் விஜய்- ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோருகிறார்

May 8, 2026 - 06:59 PM -

0

ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் விஜய்- ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோருகிறார்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. 

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. 

தொடர்ந்து நேற்றும் கவர்னரை விஜய் சந்தித்திருந்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்தார் என தகவல் வெளியானது. 

இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தது. விசிகவும் ஆதரவு அளிக்கும் என எதிரபர்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க திட்டமிட்டார். இதன்படி, இன்று மாலை 6.00 மணிக்கு கவர்னரை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. 

ஆளுநர் நேரம் ஒதுக்கியதையடுத்து விஜய் அவரை சந்த்க்க புறப்பட்டுள்ளார். சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்கும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title