May 8, 2026 - 07:17 PM -
0
தவெக ஆட்சியமைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவளித்த நிலையில், விஜய் ஆட்சியமைக்க மேலும் 6 பேரின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்த நிலையில், பெரும்பான்மைக்கான பட்டியலை அளிக்குமாறு அவர் கேட்டிருந்தார். இந்த நிலையில் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டிருந்தது.
இதனையடுத்து இன்று ஆலோசனை நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தவெக ஆட்சியமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இரு கட்சிகளுமே ஆதரவுக் கடிதங்களை அளித்துள்ளன.
இந்நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தவெகவின் ஆதரவு 118 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தவெக பெரும்பான்மையை நிருபித்துள்ள நிலையில் தமிழக ஆளுநரை சந்தித்து அக்கட்சியின் தலைவர் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.
