Header Logo

செய்திகள்
முழு நாடுமே ஒன்றாக - 150,000-இற்கும் மேற்பட்டோர் கைது

May 8, 2026 - 08:20 PM -

0

முழு நாடுமே ஒன்றாக - 150,000-இற்கும் மேற்பட்டோர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய மட்டத்திலான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் 150,000-இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் இன்று (08) வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 169,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது 1,937 கிலோ 270 கிராம் ஹெரோயின், 1,994 கிலோ 241 கிராம் ஐஸ் போதைப்பொருள், 431 கிலோ 242 கிராம் குஷ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 2,767 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 318 பேர் தொடர்பில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும், 2,031 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title