Header Logo

செய்திகள்
விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

May 9, 2026 - 07:46 AM -

0

விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, திருத்தப்பட்ட மின் உற்பத்திச் செலவு மதிப்பீட்டை 'நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்' (National System Operator) நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் சமர்ப்பித்திருந்தது. 

எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையே, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான வாய்மூலக் கருத்துத் தெரிவிக்கும் சந்தர்ப்பமும் அண்மையில் நிறைவடைந்தது. 

எவ்வாறாயினும், தரமற்ற நிலக்கரியினால் ஏற்படும் நட்டத்தை மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண திருத்தத்தை ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 

இதன்போது மின்சாரக் கட்டணத்தை 8 சதவீதத்திற்கும் 14.4 சதவீதத்திற்கும் இடைப்பட்ட அளவில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title