Header Logo

செய்திகள்
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

May 9, 2026 - 01:22 PM -

0

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி

2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி மீண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர் மட்டத்திற்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது. 

மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 மார்ச் மாத இறுதியில் 7,026 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்ட மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு, ஏப்ரல் மாத இறுதியில் 6,759 மில்லியன் டொலர்கள் வரை குறைந்துள்ளது. 

கையிருப்பு சொத்துக்களின் பிரதான அங்கமான வெளிநாட்டு செலாவணி கையிருப்பும் ஏப்ரல் மாதத்தில் 6,800 மில்லியன் டொலர்களிலிருந்து 6,505 மில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

அதேபோல், மத்திய வங்கியின் தங்க கையிருப்பும் 222 மில்லியன் டொலர்களிலிருந்து 219 மில்லியன் டொலர்களாகக் குறைவடைந்துள்ளது. 

ஐந்தரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக 2026 பெப்ரவரி மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியதுடன், அந்த மாத இறுதியில் அது 7,284 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்தது. 

எவ்வாறாயினும், மார்ச் மாதத்தில் அது 7,026 மில்லியன் டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. அதன்படி, ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் உத்தியோகபூர்வ கையிருப்பில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title