May 9, 2026 - 06:23 PM -
0
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி தற்போது விஜய் ஆளுநரை சந்திப்பதற்கு செல்வதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு தமிழகத்திற்கு பொறுப்பான ஆளுநர் கேரளா செல்லவிருந்த நிலையில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய விஜய்யை சந்திப்பதற்கு மாலை 6.30க்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆளுநருடனான சந்திப்புக்காக விஜய்யின் கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ள கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை இன்று (9) அளித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி ஆதர் அர்ஜூனா ஒரு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து த.வெ.க.வுக்கு ஆதரவளிக்கும் கடிதத்தை ஆதவ் அர்ஜூனாவிடம் திருமாவளவன் வழங்கியுள்ளார்.
திருமாவளவன் வழங்கிய ஆதரவு கடிதத்தை ஆதவ் அர்ஜூனா காட்டினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்பார் என்றார். வி.சி.க. ஆதரவு தந்ததால் த.வெ.க.வின் பலம் 118ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கான ஆதரவை வழங்க 120 என்ற ஆசன எண்ணிக்கை தமிழக வெற்றிக்கழகத்திற்கு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
