Header Logo

இந்தியா
தமிழகத்தின் தற்போதைய நிலைமை பகிரங்கமாக அறிவிக்கப்படும் - விஜய்

May 10, 2026 - 11:06 AM -

0

தமிழகத்தின் தற்போதைய நிலைமை பகிரங்கமாக அறிவிக்கப்படும் - விஜய்

புதிய தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் முதலமைச்சரானதுமே 3 முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

​பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல், 200 அலகுகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்குவதற்கான ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளார். 

இதனையடுத்து கருத்து தெரிவித்த விஜய் தமிழ்நாடு தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பதை பகிரங்கமாக அறிவித்த பின்னர் தமது பணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருளை கட்டுப்படுத்த இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன் தமது நோக்கங்களை சரிவர நிறைவேற்றுவதற்கு சிறிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

சட்டம் ஒழுங்கு சரிவர நிறைவேற்றப்படும் என்பதுடன் சிறுபான்மை மக்களுக்கான ஒரு அரசாக தமிழக வெற்றிக் கழகம் தமது செயற்பாடுகள் முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டார்.

குழந்தைகளால் ஏற்பட்ட இந்த வெற்றிக்காக அவர்களது எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு சிறந்த திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

ஹஜ்ஜுப் பெருநாள் என்பது தியாகத்தின் பெருநாளாகும்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

தோற்றுப்போனவர்கள் எங்களுக்கு சவால் விடுகிறார்கள்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

மக்களுடைய காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப்பணியின் 9 ஆம் நாள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு கொடுத்து விடுங்கள்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

விஜய் இலங்கை வருவார் என நம்புகிறோம்!

title